சுவீடன் பிரதமர் ஸ்டீபன் லோபென் இந்தோ-நார்டிக் மாநாட்டில் பங்கேற்பதற்காக சுவீடன் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தார்.
ஐந்து நாள் அரசு முறைப் பயணமாக சுவீடன், பிரிட்டன் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார். முதற்கட்டமாக சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் லோபென் விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தார்.
அப்போது, அங்கு திரண்டிருந்த சுவீடன் வாழ் இந்தியர்களும் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சுவீடனில் இன்று நடைபெறும் இந்தோ-நார்டிக் மாநாட்டில் மோடி பங்கேற்கிறார். அந்நாட்டு அரசரையும் சந்தித்து பேச உள்ளார்.
சுவீடன் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, நாளை முதல் 20-ஆம் தேதி வரை லண்டனில் நடைபெறும் காமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டிலும் மோடி கலந்து கொள்கிறார். பின்னர் ஜெர்மனி செல்லும் அவர், அந்த நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கலை சந்தித்து பேசுகிறார். வரும் 21-ஆம் தேதி மோடி நாடு திரும்புகிறார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வை…
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்துக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…
சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…