சுட்டுக்கொல்லப்பட்ட ஆப்பிள் ஊழியரின் மனைவிக்கு அரசு வேலை..!!
லக்னோ: கடந்த மாதம் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆப்பிள் நிறுவன ஊழியரின் மனைவி கல்பனாவை உ.பி மாநில துணை முதலமைச்சர் தினேஷ் சர்மா, இன்று சந்தித்து அரசாங்க வேலைக்கான பணி நியமன கடிதத்தை வழங்கினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கல்பனா தனது கணவரது கொலை குறித்து நடத்தப்பட்டு வரும் விசாரணை இன்றுவரை தனக்கு திருப்தி அளிப்பதாக கூறியுள்ளார்.
விவேக்(38) தனது நண்பருடன் காரில் சென்று கொண்டிருந்த போது, காவலர் பிரஷாந்த் சவுத்ரியால் சுடப்பட்டார். இதில் அவர் உயிரிழந்தார்.
விவேக்கின் உறவினர்கள் கொடுத்த புகாரின் போரில், காவலர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, உடனடியாக காவலர்கள் சவுத்ரி மற்றும் சந்தீப் குமார் கைது செய்யப்பட்டார்கள்.
DINASUVADU