சுங்கச் சாவடி கட்டணம் மறுசீரமைக்கப்படுறது…!விரைவில் அமல்..!!!
நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்தும் முறை மற்றும் கட்டண விகிதங்களை மறுசீரமைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் கட்டணம் செலுத்தும் முறையில் அதிக கட்டணம், மற்றும் நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் மாறுபட்ட கட்டண விகிதம்,வாகன ஒட்டிகளுக்கு காலதாமதம் அதனால் ஏற்படும் சச்சரவுகள் ஆகியவை தொடர்வதால் மின்னணு முறையில் கட்டணங்களைச் செலுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கமுடிவு மத்திய அரசு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தெரிவித்த நெடுஞ்சாலை ஆணை அதிகாரிகளில் ஒருவர் ஸ்மார்ட் டேக் முலம் கட்டணம் செலுத்தும் வாகனங்களுக்கு சுங்கச் சாவடிகளில் வரிசையில் நிற்பது போன்றவற்றிலிருந்து நிரந்தர விலக்கு அளிப்பது கூறித்து முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் சுங்கச்சாவடிக்கான இந்த திட்டவரைவு அடுத்த 3 மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும் என தெரிவித்தார்.இதன் மூலம் மின்னணு முறையில் ஒருவர் கட்டணம் செலுத்தும் போது 70 – 80 சதவீதம் வாகனங்கள் நெரிசலில் சிக்குவது தடுக்கப்படும் என தெரிவித்தார். இதனால் மின்னனு மூலம் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தும் முறையாக மறுசீரமைக்கப்பட உள்ளதாக தெரிகிறது.