பிரதமர் நரேந்திர மோடி,இந்தியா மற்றும் சீனா உலக வர்த்தகத்தில் நீண்ட நெடுங்காலமாக ஆதிக்கம் செலுத்தும் நாடுகள் என்றும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு, பிரச்சனை இன்றி தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் ((Nanyang Technical University)) மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், இந்தியாவும் சீனாவும் பன்னெடுங்காலமாக சர்வதேச வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
ஆனால், அதில் எப்போதும் மோதல் போக்கு இருந்ததில்லை என்றும், அதேபோல் தற்போதும் உலக வர்த்தக உறவை மேம்படுத்துவதில் இருநாடுகளும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
21 ஆவது நூற்றாண்டில் உலக நாடுகள் ஆசிய நாடுகளை நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும், அதை ஆசிய நாடுகள் உணர வேண்டும் என்பதே முக்கியமானது என்றும் பிரதமர் மோடி தமது உரையில் குறிப்பிட்டார். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி சமூகத் தடைகளை தகர்க்க உதவுவதால், அது மேலும் மலிவாகவும், எளிதாகவும் மக்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…