சீனா-இந்தியா உறவை மேம்படுத்த சாதகமான சூழல் நிலவுகிறது!பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்
பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்,இந்தியா-சீனா உறவை மேம்படுத்த சாதகமான சூழல் நிலவி வருவதாக தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரில், சீனாவின் புவி அரசியல், வணிகம் மற்றும் சமூக மாற்றம் தொடர்பான சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்று சிறப்புரையாற்றிய அவர், நாளை ஷாங்காயில் நடைபெறும் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பதைச் சுட்டிக்காட்டினார். பிரதமர் மோடி சீனா அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதினிடமும், சுமூகமான உறவை மேற்கொண்டுள்ளதன் மூலம் எதிர்காலத்தில் இந்தியா- சீனா உறவு மேம்படும் என நம்பிக்கை தெரிவித்தார். சீனாவில் தொழிநுட்ப மேம்பாட்டால், மனித வளத்தை குறைத்து இயந்திரங்களை அதிகப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார். மேலும் இந்தியாவில் மூன்று லட்சம் கோடி ரூபாய் அளவில் உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக செலவிடப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.