சீனாவை கண்டதும் பிரதமர் நரேந்திர மோடி பயப்படுகிறார்!காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ,எவ்வித நோக்கமும் இல்லாமல் சீனா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, Doklam விவகாரம், சீனாவின் பொருளாதார சாலைத்திட்டம் குறித்து நினைவூட்ட விரும்புவதாக,தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது Twitter பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சீன பயணத்தின் போது பிரதமரின் முகத்தில் பதற்றத்தை காணமுடிந்ததாக குறிப்பிட்டுள்ளார். Doklam விவகாரம், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமையும் சீனா- பாகிஸ்தான் பொருளாதார சாலைப்பணிகள் குறித்து பிரதமருக்கு நினைவூட்டுவதாக குறிப்பிட்டுள்ள ராகுல்காந்தி, திட்டமிடல் இல்லாத பயணத்தில், இது குறித்து மோடி விவாதிக்க வேண்டுமென, இந்தியர்கள் விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.