சி.பி.எஸ்.இ வினாத்தாள் வெளியான விவகாரத்தில் 9 சிறுவர்கள் உள்பட 12 பேரை கைது…!

Default Image

தனிப்படை போலீசார்  சி.பி.எஸ்.இ வினாத்தாள் வெளியான விவகாரத்தில் 9 சிறுவர்கள் உள்பட 12 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சி.பி.எஸ்.சி பொதுத்தேர்வுகள் மார்ச்  5-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 10-ம் வகுப்பு கணிதத்தேர்வின் வினாத்தாளும், 12-ம் வகுப்பு பொருளாதார இயல் தேர்வுக்கான வினாத்தாளும் வெளியானதை  அடுத்து மறுதேர்வு நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வினாத்தாள் வெளியான விவகாரத்தில் தொடர்புடைய 3 பேரை தனிப்படை போலீசார் ஜார்கண்ட் மாநிலத்தில் கைது செய்துள்ளனர். மேலும் இதில் தொடர்புடைய 9 சிறுவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, டெல்லியில் உள்ள சிபிஎஸ்இ அலுவலகத்தின் முன்பாக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்