சில நாட்களுக்குள்ளாக ​விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்!கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா

Default Image

கர்நாடக முதலமைச்சராக பதவியேற்றுள்ள எடியூரப்பா,பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசம் தேவையில்லை என்று  தெரிவித்துள்ளார்.

முதலமைச்சராகப் பதவியேற்ற எடியூரப்பா பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு தமக்கு வாழ்த்து தெரிவித்ததாகக் குறிப்பிட்டார். கர்நாடகாவில் பாஜக பெற்ற வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கட்சித் தலைவர் அமித் ஷாவின் பரப்புரையே காரணம் என தெரிவித்த எடியூரப்பா, தமக்கு ஆதரவு அளித்த அனைத்து பாஜக தலைவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.

விவசாயிகளின் கடன்கள் சில நாட்களுக்குள்ளாக தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்த எடியூரப்பா, கர்நாடக மக்களுக்கு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார். தற்போது ஏற்பட்டிருப்பது சிறிய பின்னடைவுதான் என தெரிவித்த எடியூரப்பா, பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசம் தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்