சிலை வைக்க, ரயில் விட, சுய விளம்பரங்களுக்கு மக்கள் பணத்தை மோடி அரசு வீணடித்து விட்டது…சீத்தாராம் யெச்சூரி கடும் கண்டனம்….
தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் குறையாத நிலையில் அரசு அதன் தீவிரத்தை குறைக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பொதுமக்கள் நிதிய்யுதவி அளிக்கலாம் என அரசின் தரப்பிலிருந்து பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். இந்த வேண்டுகோளை ஏற்று பலதரப்பினரும் நிதியுதவி அளித்தனர். இந்நிலையில் இதை விமர்சனம் செய்யும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற குழுவின் தலைவருமான சீத்தாராம் யெச்சூரி அவர்கள் , மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு சிலைகள் அமைப்பதிலும், புல்லட் ரயில் விடுவதிலும், சுயவிளம்பரத்திலும் மக்களின் வரிப் பணத்தை வீணடித்துள்ளதாக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.மேலும் அவர், பிரதமர் மோடி மக்கள் பணத்தை வீணடித்துவிட்டதால் சுகாதாரத்தை பலப்படுத்த அரசிடம் பணம் இல்லாமல் போய்விட்டது என்று தனது குறிப்பில் தெரிவித்துள்ளார்.