சிறையில் உள்ள லாலு பிரசாத் சகோதரி இறுதிச்சடங்கில் பங்கேற்க பரோல் கோர முடிவு!
கால்நடைத் தீவன ஊழலின் 2-வது வழக்கில் ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத்துக்கு நேற்றுமுன்தினம் மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவர் ராஞ்சியில் உள்ள பிர்ஸா முண்டா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கங்கோத்ரி தேவி பாட்னாவில் நேற்று காலமானார்.
இதுகுறித்து லாலுவின் மகன் தேஜஸ்வி கூறியதாவது: கங்கோத்ரி தேவியின் மரணம் குறித்து எனது தந்தை லாலுவுக்கு சிறை அதிகாரிகள் மூலம் தகவல் தெரிவித்துள்ளேன். அத்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பரோல் கோர முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
லாலுவின் மனைவி ராப்ரி தேவி கூறியபோது, லாலு விடுதலைக்காக கங்கோத்ரி தேவி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். லாலுவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது அவருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது என்று தெரிவித்தார்.கங்கோத்ரி தேவியின் உடல் அவரது சொந்த கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது..
source: dinasuvadu.com