சிறுமி அஷிஃபா வன்கொடுமையில் குற்றவாளிகளுக்கு ஆதரவு தெரிவித்து சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்கள்..! ராஜினாமா செய்யப்பட்டதற்கான காரணம் என்ன?

Default Image

பாஜக அமைச்சர்கள் இருவர், காஷ்மீரில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவு தெரிவித்து  சர்ச்சையில் சிக்கியதால்   ராஜினாமா செய்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் கத்வா மாவட்டத்தில் 8 வயது சிறுமி அஷிஃபா, பாஜக பிரமுகர்கள் மற்றும் காவல் துறையினரால் கொடூரமான முறையில் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து, பல்வேறு பகுதிகளில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவம் தொடர்பாக 3 போலீசார்  உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக பாஜக அமைச்சர்கள் சந்திரபிரகாஷ் கங்கா மற்றும் லால் சிங் இருவரும் பேசியது பெரும் சர்ச்சையை  ஏற்படுத்தியது.

தனால் அவர்கள் இருவரும் ராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் தங்களது ராஜினாமா
கடிதங்களை ஜம்மு காஷ்மீர் மாநில பாஜக தலைவர் சத் சர்மாவிடம் அளித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்