சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை விதிக்கும் புதிய சட்டம் கொண்டு வரப்பட உள்ளது” – காஷ்மீர் முதல்வர் அறிவிப்பு..!

Default Image

ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் மெகபூபா முப்தி ,சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை விதிக்கும் புதிய சட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கதுவா பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுபோன்று மற்றொரு குழந்தையும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என கருத்து தெரிவித்துள்ளார் காஷ்மீர் மாநில முதல்வர் மெகபூபா முப்தி.

இது தொடர்பாக தனது ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள மெகபூபா முப்தி, கதுவா சம்பவத்துக்கு நீதி கிடைக்க நாடு முழுவதும் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில் சிறுமி அஷிஃபா வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்க்கோரி அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்