சிறுநீர் கழிக்கச் சென்ற டிரைவர்..! குழந்தைகளுடன் பள்ளி பஸ் பள்ளத்தில் சென்றது..!

பாட்னாவின் மிதாபூரில் பேருந்து நிலையத்தின் அருகே இன்று காலை ஐந்து குழந்தைகளுடன் ஒரு பள்ளி பேருந்து சாலையின் விளிம்பில் பின் புறமாக பள்ளத்தில் சென்றது என போலீசார் தெரிவித்தனர். பள்ளி பேருந்தின் டிரைவர் பேருந்தை சாலையின் விளிம்பிற்கு அருகே நிறுத்தியதாக கூறப்படுகிறது.
பேருந்தில் ஐந்து குழந்தைகள் இருந்தனர்.இந்நிலையில் பேருந்தை விளிம்பில் நிறுத்தி இருந்ததால் எடை தாங்காமல் பின்புறமாக சென்றது. சிறிது தூரம் சென்றதும் பேருந்து நின்று விட்டது.
இன்னும் சிறிது தூரம் சென்று இருந்தால் பேருந்து அருகில் இருந்த குளத்தில் மூழ்கி இருக்கும் என அங்கு இருந்தவர்கள் கூறினர். பேருந்தில் இருந்த குழந்தைகளை பத்திரமாக மீட்டனர். பேருந்தை கிரேன் மூலம் ரோட்டிற்கு கொண்டு வந்தனர்.இந்த சம்பவம் நடந்தபோது சிறுநீர் கழிக்க பஸ் டிரைவர் சென்றதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!
April 26, 2025
திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!
April 26, 2025