சிறிய ரக விமானம் மும்பையில் விபத்து! 5 பேர் பலி?
சிறிய ரக விமானம் மும்பையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த இடத்தில் விழுந்து நொறுங்கிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
கட்டுமானப் பணிகள் மும்பையின் காட்கோபர் பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்தில் இன்று நண்பகல் பலத்த சத்தத்தோடு சிறிய ரக விமானம் ஒன்று கீழே விழுந்து திடீரென தீப்பிடித்தது.
தீயணைப்புத் துறைக்கு இதைக் கண்டு அஞ்சியவர்கள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயைக் கட்டுப்படுத்தவும், அதனுள் இருப்பவர்களை மீட்கவும் போராடினர். இருப்பினும் 5 பேர் இந்த விபத்தில் உயிரிழந்துவிட்டதாக மும்பை போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.மும்பையின் ஜுஹு விமான நிலையத்தில் தரையிறங்க இருந்த நிலையில், விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் இருவர் விமானி என்றும், இருவர் விமானப் பராமரிப்பு பொறியாளர்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் விமானம் விழுந்த இடத்தில் இருந்த ஒருவரும் உயிரிழந்ததால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 5 ஆக உள்ளது. விமானத்தில் இருந்து விபத்துக்கான காரணம் கண்டறியும் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது.