Categories: இந்தியா

சிறிய அளவிலான தொகை வைத்து ரம்மி விளையாடினால் சூது இல்லை : உயர்நீதிமன்றம் கருத்து

Published by
மணிகண்டன்

டெல்லி : டெல்லி கிளப் ஒன்று அங்கு வேலைபார்த்த ஊழியரான சுரேஷ் குமார் என்பவரை வேலையிலிருந்து நீக்கியது. இந்த நடவடிக்கை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, அவர் கிளப்பை மாபியா கும்பல் ஒன்று இயக்குவதாக உள்ளூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மேலும், அந்த கிளப்பில் சூதாட்டம் நடப்பதாகவும் புகார் அளித்தார்.

இதை விசாரித்த உள்ளூர் நீதிமன்றம், கிளப்பில் சிறிய அளவிலான தொகை வைத்து ‘ரம்மி’ விளையாடினால் அது குற்றமல்ல என கூறியது. மேலும் பொய் வழக்கு தொடர்ந்ததற்காக சுரேஷ் குமாருக்கு ரூ.3 லட்சம் அபராதமும் விதித்து தீர்பளித்தது. இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் சுரேஷ் குமார் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வால்மீகி ஜே.மேத்தா, கீழ் கோர்ட்டின் தீர்ப்பை உறுதி செய்தார்.

அவர் தனது தீர்ப்பில் கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் ஐகோர்ட்டு சரியான கருத்தையே கொண்டுள்ளது என்பதே எனது கருத்தாகும். ஏனெனில் சுப்ரீம் கோர்ட்டின் கூற்றுப்படி, ஒரு கிளப் வளாகத்தில் வெறும் ஒரு சில அணாக்கள் முதல் சிறிய தொகை வரையிலான ரூபாய் வரை வைத்து ‘ரம்மி’ விளையாடுவது சூதாட்டம் ஆகாது’ என தீர்ப்பளித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

4 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

16 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

22 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

22 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

22 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

22 hours ago