சிம்லாவில் கடுமையான தண்ணீர் பஞ்சம்..!
இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் சுற்றுலா நகரான சிம்லாவில் கடுமையான குடிநீர்ப்பஞ்சம் நீடிக்கிறது.
இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் யாரும் வரவேண்டாம் என்று உள்ளூர் மக்கள் காலிக் குடங்களுடன் சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பல்வேறு தங்கும் விடுதிகள் இழுத்து மூடப்பட்டுள்ளன.
பாட்டில்களில் விற்கப்படும் குடிநீர் 100 ரூபாய் வரை விலை உயர்ந்து விட்டதாக பயணிகள் புகார் கூறுகின்றனர்.
மேலும் தங்கும் விடுதிகளிலும் குடிநீருக்காக தனி கட்டணங்கள் வசூலிக்கப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஏமாற்றத்துக்கு ஆளாகியுள்ளனர்.
கோடை வெயிலைத் தணிக்க சிம்லா போன்ற குளிர்ச்சியான மலைவாசஸ்தலங்களுக்கு வந்தால் இதுபோன்ற குடிநீர்ப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாப் பயணிகள் புலம்புகின்றனர்.