சிபிஐ_க்கு தடை…சந்திரபாபு நாயுடு அரசுஅதிரடி..!
ஆந்திராவில் சிபிஐ தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்துவதற்கு வழங்கிய அனுமதியை சந்திரபாபு நாயுடு திரும்ப பெற்றது.
ஆந்திராவில் சோதனைகள் மற்றும் விசாரணைகளை மேற்கொள்ள cbi யை அம்மாநில அரசு திரும்ப பெற்றது. இந்த உத்தரவை அடுத்து சிபிஐ ஆந்திரா எல்லைக்குள் எந்த ஒரு சோதனையும் மேற்கொள்ள அரசிடம் அனுமதி கேட்க வேண்டும்.ஆகஸ்ட் 3-ம் தேதி ஆந்திரா அரசு உத்தரவை வெளியிட்டு இருந்தது. இதற்கிடையே மாநில விசாரணைப்பிரிவின் அதிகார வரம்பை விஸ்தரிக்க ஆந்திர பிரதேச மாநில துணை முதல்வர் சின்ன ராஜப்பா, சிபிஐக்கு எதிராக குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்கள் காரணமாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். “எங்களுக்கு சிபிஐயின் மீது நம்பிக்கையுள்ளது. ஆனால் சிபிஐயின் தலைமை அதிகாரிகளுக்கு எதிரான சமீபத்திய குற்றச்சாட்டுக்கள் எங்களுடைய ஒப்புதலை திரும்ப பெற செய்யும் கட்டாயத்திற்கு தள்ளியது.
dinasuvadu.com