சிபிஐ சட்ட ஆலோசகர் மீது சிபிஐ 4 பிரிவுகளின் வழக்குப்பதிவு…!!
சிபிஐ சட்ட ஆலோசகர் மீது சிபிஐயே 4 பிரிவுகளில் மோசடி வழக்குப்பதிவு செய்திருக்கிறது.
சிபிஐ இயக்குநருக்கும், சிபிஐ சிறப்பு இயக்குநருக்கும் இடையே பரஸ்பர லஞ்ச புகார் தொடர்பாக வழக்கு பதிவானதை அடுத்து இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர்.
இவர்கள் மீதான புகார் குறித்து விசாரணை நடத்திய மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு அமைப்பு தனது அறிக்கையை, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், சிபிஐ அமைப்பின் துணை சட்ட ஆலோசகராக இருக்கும் பீனா ரய்ஜாதா ((Beena Raizada)) மீது சிபிஐ 4 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்துள்ளது. தமக்கு சாதகமான பதவி உயர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக, தனது வருடாந்திர பணி அறிக்கையில், கிளை தலைவரின் போலியான கையெழுத்துகளை போட்டு மோசடி செய்திருப்பதாக, பீனா ரய்ஜாதா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
DINASUVADU.COM