சிபிஐயில் ஏற்பட்ட சண்டை ஒரே நள்ளிரவிலே ஏற்பட்டுவிட்டதா..?ஏன் மத்திய அரசு தலையிட்டது..!உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி..!!
சிபிஐ விவகாரம் நாட்டையே திரும்பி பார்க்க வைத்த நிலையில் அங்கு அதிகார போட்டி ஏற்படவே இந்த மோதலில் மத்திய அரசு திடீரென தலையிட்டது ஏன் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கடும் விமர்சனத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்திய சிபிஐ விவகாரம் தொடர்பாக அலோக் வர்மா சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.இதில் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி மத்திய அரசுக்கு பல கேள்விகளை எழுப்பினார்.அப்போது இரு உயர் அதிகாரிகளுக்கு இடையேயான சண்டையானது ஒரே நாள் நள்ளிரவில் ஏற்பட வில்லை என இருக்கும் போது இந்த விவகாரத்தில் மத்திய அரசு தேர்வுக் குழுவிடம் ஆலோசிக்காமல் உடனடியாக தலையிட்டு அலோக் வர்மாவை ஏன்.? நீக்கியது என்று கேள்வி எழுப்பினர்.இதனிடையே இன்னும் சில மாதங்களில் அலோக் வர்மா ஓய்வு பெற உள்ள நிலையில்மத்திய அரசு காத்திருக்காமல் அல்லது தேர்வுக் குழுவிடம் ஆலோசிக்காமல் எப்படி நடவடிக்கை எடுத்தது..? ஏன்.? என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.