சிக்கலில் மத்திய அரசு….ஆப்பு வைத்தது உச்சநீதிமன்றம்…!!
ரபேல் விமான ஒப்பந்த விவரங்களை சீலிடப்பட்ட கவரில் வைத்து தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து அதிநவீன ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
இதனை மத்திய அரசு மறுத்து வரும் நிலையில், ரபேல் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில், பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது.
Supreme Court asks Central government to disclose information on #Rafale deal which can be legitimately put in public domain and information on induction of Indian offset partner be furnished to petitioners who have filed PILs https://t.co/XWMpffILGJ
— ANI (@ANI) October 31, 2018
அப்போது, ரபேல் போர் விமானத்தின் விலை உள்பட முக்கிய அம்சங்களை சீலிடப்பட்ட கவரில் வைத்து 10 நாட்களுக்குள் சமர்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
dinauvadu.com