சிகரெட் பாக்கெட்டில் எச்சரிக்கை படம்-உச்சநீதிமன்றம் மறுப்பு
சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் புகையிலை பொருட்களின் மீது, அச்சடிக்கப்படும் எச்சரிக்கை படம் குறித்த ஆந்திரா நீதிமன்ற உத்தரவிற்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதிக்க மறுத்துள்ளது. கடந்த, 2014ல், புகையிலை பொருள் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகள் மீது, 85 சதவீதம், எச்சரிக்கை படம் இடம் பெற வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால், சிகரெட் பாக்கெட் மற்றும் புகையிலை பொருட்களின் மீது, 85 சதவீதத்திற்கு பதில், 40 சதவீத அளவு எச்சரிக்கை படம் இடம் பெறலாம் என, கர்நாடக உயர் நீதிமன்றம், கடந்த வாரம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த நீதிபதி அமர்வு, கர்நாடக மாநில உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும், கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவை, அதன் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கின் மீதான விசாரணையை, 2018, ஜன., 8ம் தேதிக்கு, உச்ச நீதிமன்றம் தள்ளிவைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.