சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவது சவாலாக இருக்கிறது : நிதின்கட்காரி..!
நிலம் கையகப்படுத்துவதில் ஏற்படும் இடையூறு போன்ற பிரச்சினைகளால் சாலை திட்டங்களை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படுவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.
கோவா மாநிலம் பனாஜியில் பேசிய அவர், சாலை அமைக்கும் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்துவது மிகப்பெரிய சவாலாக இருப்பதாக கூறினார். நிலம் கையகப்படுத்துவதில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். குறைவான செலவில் சாலை திட்டப் பணிகளை நிறைவேற்ற, நிர்ணயிக்கப்பட்ட காலகட்டத்திற்குள் அவற்றை முடிக்க வேண்டியது முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 27 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபெறும் 1200 சாலை திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டதாகவும் நிதின்கட்காரி தெரிவித்தார்.