சார்க் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளாது….சுஷ்மா சுவராஜ் திட்டவட்டம்…
சார்க் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளாது என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்த்தாபூர் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டதால் இந்தியா -பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை தொடங்கும் என பொருள் இல்லை என்றார். சீக்கிய பக்தர்கள் பாகிஸ்தானுக்கு செல்வதற்காக இந்தியா சார்பில் பல ஆண்டுகள் கோரிக்கை எழுப்பப்பட்டதாக அவர் கூறினார். ஆனால் இப்போதுதான் பாகிஸ்தான் ஒப்புதல் அளித்துள்ளது என்றார் அவர்.
பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் நடைபெற முடியாது என்று குறிப்பிட்ட அவர், பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை கிடையாது என்று தெரிவித்தார். சார்க் மாநாட்டில இந்தியா கலந்து கொள்ளாது என்றும் சுஸ்மா சுவராஜ் கூறினார்.சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்க உள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
dinasuvadu.com