கேரளாவிலும் தென் தமிழகத்திலும் கடந்த மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது. அது படிப்படியாக தீவிரம் அடைந்து நேற்று காலை 11.30 மணிக்கு மராட்டிய மாநிலம் தெற்கு கொங்கன், தென்மத்திய மராட்டியம் மற்றும் மராத்வாடா, தெற்கு விதர்பா பகுதிகளை அடைந்து அங்கு தீவிரமாக மழை கொட்டியது.
மும்பை மற்றும் புறநகர் பகுதியிலும் மழை பெய்யத் தொடங்கியது. இதனால் புறநகர் ரெயில்கள் 20 நிமிடம் தாமதமாக சென்றன. விமான சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டது.
அதன்படி இன்று காலை முதல் மும்பையில் தீவிரமாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருப்பதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்து தடைபட்டுள்ளது. ரெயில் தண்டவாளங்களில் மழை நீர் தேங்கி இருப்பதால் புறநகர் ரெயில்கள் மெதுவாக இயக்கப்படுகிறது. விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இன்றும், நாளையும் மழை மிதமிஞ்சிய அளவில் பெய்யும். 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
மோசமான வானிலை காரணமாக மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் வந்த 2 விமானங்கள் ஆமதாபாத் நகருக்கு திருப்பி விடப்பட்டன.
மும்பை வரும் அனைத்து ரெயில்களும் தாமதமாக வந்துகொண்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்
சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் 13 கிராமங்களை சேர்ந்த ஊர்மக்கள் 900…
வங்கதேசம் : கிரிக்கெட்அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தன்னுடைய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…