சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாட்டம்!
பிரதமர் நரேந்திர மோடியுடன் நான்காவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு டேராடூனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 50 ஆயிரம் பேர் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
சர்வதேச யோகா தினத்தையொட்டி உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். டேராடூன் வனஆய்வு மைய அரங்கில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அதிகாலையிலேயே திரண்டிருந்தனர். பொதுமக்களோடு இணைந்து பிரதமர் மோடியும் யோகாசனங்களில் ஈடுபட்டார்
முன்னதாக இவ்விழாவில் பேசிய மோடி, இந்தியா உலகிற்கு அளித்த கொடைதான் யோகா என்றும், இன்று உலகமே யோகாவை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் கூறினார். மனம், அறிவு,உடலை ஒருங்கிணைத்து குடும்பங்களில் மகிழ்ச்சியையும் அமைதியையும் யோகா ஏற்படுத்துவதாக கூறினார்.
சூரியன் உதிக்கும் இடத்தில் எல்லாம் இன்று யோகா மூலம் வரவேற்பதாக தெரிவித்த அவர், டேராடூன் முதல் டப்ளின் வரையிலும், டோக்கியோவில் இருந்து டொரண்டோ வரையிலும், இமயமலை உச்சியிலும்கூட இன்று யோகா கொண்டாடப்படுவதாக பெருமிதம் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.