சர்தார் வல்லபாய் பட்டேல்க்கு தோராயமான பிறந்த தேதிதான்….!!

Default Image

இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவின் வரலாறு இப்படி ஒரு மனிதனை நீக்கிவிட்டு முழுமை பெறாது என்பது மறக்கமுடியாத உண்மை. சுதந்திர இந்தியாவிலும் சுதந்திரத்திற்கு முற்பட்ட இந்தியாவிலும் பெரும்பங்கு ஆற்றியவர்களில் குறிப்பிடத்தக்கவர்களில் முக்கியமான இவர். குழந்தைகள் மத்தியில் பழங்கால வரலாறாகிப்போன இவர் அண்மையில் 182 மீட்டர் சிலையாகி மிரட்டி மீண்டும் பேசுபொருளானார்.
உலகின் மிக உயர்ந்த சிலை இன்றைய தேதிக்கு (15.12.18) இதுதான். 597 அடி உயரமுள்ள சிலை. ஒரு ஒப்பீட்டுக்குக் கொள்வதானால் நம் கன்னியாகுமரியில் இருக்கும் வள்ளுவர் சிலையே வெறும் 133 அடிதான். ஆனால் பட்டேலின் சிலை உயரம் 182 மீட்டர். (1 மீட்டர் = 3.2 அடி என்பதை நினைவில் கொள்க)
1950 ம் ஆண்டு மறைந்த இவரது நினைவு தினம் இன்று காந்தியின் மறைவுக்குப் பிறகு முகவும் மனம்குன்றியும், உடல்வலுக்குன்றியும் இருந்த சர்தார் வல்லபாய் பட்டேல் அடுத்த இரண்டு மாதங்களில் மாரடைப்பால் இறந்து போனார். நிகழ்காலம் எதிர்காலத்திற்கு நினைவுட்டிக்கொண்டே இருக்கவேண்டியவர்களில் இவரும் ஒருவர்.
வெறும் வழக்கறிஞராக, சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமராக, உள்துறை அமைச்சராக மட்டுமே அறியப்பட்ட சர்தார் வல்லபாய் பட்டேலின் வெவ்வேறு பரிமானங்களை அலசுகிறது இந்தக் கட்டுரை.
 
பிறந்த தேதி தெரியாது:
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினம் இன்று வரை உறுதிசெய்யப்படாத ஒன்று. அபடியென்ரால் எதனடிப்படையில் அவருக்கு ஆண்டுதோறும் பிறந்தநாள் அனுசரிக்கிறோம்?. அவரது பள்ளிச் சான்றிதழ் சொல்லும் பிறந்த தேதியான அக்டோபர் 31 ஐ வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் பிறந்தநாளாக கொண்டாடிவருகிறோம். வெறும் வழக்கறிஞராக வேலை செய்ததோடு மட்டுமல்லாமல் விவசாயியாகவும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் வேலைசெய்திருக்கிறார். ராணி ஜான்சியிடம் உதவையாளராக இவரது தந்தை பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்தார் வல்லபாய் பட்டேல் லேவா பட்டேல் சமூகத்திலிருந்து ஒரு பாரம்பரியமான குஜராத்தி குடும்பத்தில் பிறந்தார். சர்தார் வல்லபாய் பட்டேலின் சொந்த ஊர்  குஜராத்தின் கரம்சாத் ஆகும்.இவருக்கு சோமாபாய், நர்சிபாய் மற்றும் விதால்பாய் பட்டேல் என்ற மூன்று அண்ணன்களும், காசிபாய் பட்டேல் என்ற தம்பியும், தைபா என்ற தங்கையும் உடன் பிறந்தவர்கள் ஆவார்.
இவர் வகுத்த திட்டங்களால் நாடு பெரும்பாலான நேரங்களில் தன் இக்கட்டிலிருந்து மீண்டது என்பது குறிப்பிடத்தக்கது. எடுத்துக்காட்டாக சுதந்திரத்திற்குப் பிறகு மீண்டும் மன்னர்களிடம் எழுந்த எழுச்சி தங்கள் நாடுகளைத் தங்களுக்கே உரிமையுள்ளவை என்று போட்டியிட வைத்தது. ஏறக்குறைய 500 க்கும் மேற்பட்ட அரசகுடும்பங்கள் கலகம் செய்தன. இந்த எல்லாப்பிரிவினைகளையும் தாண்டி இப்போதிருக்கும் மாநிலப்பகுப்புச் செய்யப்பட்ட இந்தியாவை நிறுவியது இவரின் திட்டங்களால்தான்.
அதற்குப் பிறகும் கூட அரசகுடும்பங்களான சிறு மற்றும் குறுநில மன்னர்களுக்கு உதவித்தொகை அளிக்கவேண்டும் என்ர கோரிக்கையும் வைத்தார். அது அப்போதைய காங்கிரஸ் அரசால் நிராகரிக்கபட்ட்து.
சத்யாகிரகத்தின் போதுதான் இவருக்கு காந்தியை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. (civil disobedience act) ஒத்துழையாமை இயக்கம் வெகு தீவிராஅக நடந்துகொண்டிருந்த சமயம். அப்போது முதலில் கைது செய்யப்பட்டவர் இவர்தான். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் 1942 ல் மீண்டும் கைதானார் சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமராகவும் பதவிவகித்தார் என பெருமைகள் நீளும் சர்தார் வல்லபாய் பட்டேலின் நினைவுதினம் இன்று(15.12.18).

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்