சர்க்கஸில் விலங்குகளுக்கு தடை….மத்திய அரசு புதிய முடிவு…!!
சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் விலங்குகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
வன விலங்குகள், சர்க்கஸ் நிகழ்ச்சிக்காக துன்புறுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டி வரும், விலங்குகள் நல அமைப்புகள், சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் விலங்குகள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றன. சர்க்கஸ் போன்ற நிகழ்ச்சிகளில் சிங்கம், புலி, கரடி போன்ற விலங்குகளை பயன்படுத்த ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குதிரை, குரங்கு, யானை, நாய்கள் உள்ளிட்ட விலங்குகளை பயன்படுத்தவும் தடைவிதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதற்கான சட்ட மசோதாவை மத்திய அரசு தயாரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு விலங்குகள் நல அமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
dinasuvadu.com