சரத் பவார் வேதனை?வாய் புற்றுநோய்க்கு காரணம் இது தான்?
தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் சிறு வயதில் புகையிலைப் பொருட்களை உபயோகித்ததற்காக தற்போது வருந்துவதாக தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற வாய் புற்றுநோய் ஒழிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், புகையிலை மற்றும் பாக்கு மெல்லும் பழக்கத்தால் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாகவும், அறுவை சிகிச்சைக்குப் பின் கடும் அவதிகளை சந்தித்ததாகவும் தெரிவித்தார். 40 ஆண்டுகளுக்கு முன்னரே தம்மை யாராவது எச்சரித்து இருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.