சரக்குக் கப்பலில் பற்றிய தீ..!
கொல்கத்தா துறைமுகம் அருகே தீப்பற்றி எரியும் சரக்குக் கப்பலின் தீயை அணைக்க விமானப்படையின் எம்.ஐ.17 வி 5 ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி தீயைக் கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர்.
வானில் இருந்து நீரை இறைப்பதற்காக இந்த ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்த மத்திய அரசு அனுமதியளித்தது. கடந்த 14ம் தேதி சரக்குக் கப்பலில் தீப்பிடித்த நிலையில் தீயை அணைக்க இரவும் பகலும் கடுமையான போராட்டம் நீடிக்கிறது.
நேற்று பிற்பகல் ஹெலிபேடில் வந்து இறங்கி ஹெலிகாப்டரில் நீர் நிரப்பப்பட்டு தீ எரியும் இடங்கள் துல்லியமாக கணக்கிடப்பட்டன .15 ஆயிரம் லிட்டர் நீரை ஆறு முறை தெறித்துச் சென்ற ஹெலிகாப்டர் தீயை அணைக்கும் முயற்சியில் கணிசமான முன்னேற்றத்தை எட்டியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.