சமூக வலைத்தளங்கள் மூலம் வாக்கு சேகரிப்பு…..முகநூல், டுவிட்டர் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை….!!
தேர்தல் விதிமுறைகளை மீற வேண்டாம் என, முகநூல், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு, தலைமைத் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய பிரதிநிதித்துவ சட்டம் 126-வது பிரிவின்படி, தேர்தல் பிரச்சாரம் முடிந்து அடுத்த 48 மணிநேரத்திற்கு தொலைக்காட்சி அல்லது அதைபோன்ற தொழில்நுட்ப சாதனங்கள் மூலம் வாக்காளர்களிடம் வாக்கு கேட்க கூடாது என்ற சட்டம் உள்ளது. இந்தநிலையில் நேற்றைய தினம் நடைபெற்ற மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலின்போது சமூக வலைத்தளங்களில் சிலர் தாங்கள் சார்ந்த கட்சிகளுக்கு வாக்கு கேட்டுள்ளனர். இதுகுறித்த புகார் தேர்தல் ஆணையத்திற்கு சென்றுள்ளது.
இதனையடுத்து தேர்தல் விதிமுறைகள் மீறப்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு முகநூல் மற்றும் டுவிட்டர் நிறுவனங்களை இந்திய தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
dinasuvadu.com