சமூக ஊடகங்களை கண்காணிக்க வல்லுநர்கள் குழு…!!மத்திய அரசு

Default Image

சமூக ஊடகங்களை கண்காணிக்க தகுந்த வல்லுநர்களை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.பிரதமர் அலுவலகமும் தகவல் ஒலிபரப்பு அமைச்சகமும் இணைந்து சமூகஊடகங்களில் பொய்ச் செய்திகளைப் பரப்புவோரைத் தண்டிப்பதற்கான ஒரு வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளன.சமூக ஊடகங்களில் சமீபகாலமாக தவறான செய்திகள், வன்முறையை தூண்டும் கருத்துகள் வைரலாக பரவி வருகின்றன.

இவ்வாறான பதிவுகளால் பல மோதல்களும், ஜாதி மற்றும் மத மோதல்கள் பெருகி வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இளைஞர்களை தவறான வழிக்கு இழுத்து செல்லும் வீடியோக்களும் பதிவிடப்படுகின்றன. இதனை தடுக்கும் விதமாக பிரதமர் அலுவலகத்தின் அறிவுறுத்தலின் பேரில் தகவல் துறை அமைச்சகம் அதிரடியான முடிவை எடுத்துள்ளது.

.அதன்படி நாட்டில் உள்ள 716 மாவட்டங்களிலும் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் செய்திகளைக் கண்காணிக்கச் சமூக ஊடகத் தொடர்புப் பிரிவு அமைத்து அதில் வல்லுநர்களைப் பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பொறியியல் பிரிவான பிஇசிஐஎல் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது. இந்த அமைப்பு அனைத்து ஊடகங்கள் மற்றும் நிகழ்வுகளில் இருந்து தரவுகளைச் சேகரிப்பதுடன், செய்தித்தாள்கள், கேபிள் தொலைக்காட்சிகள், பண்பலை வானொலி, ஆகியவற்றையும் கண்காணிக்கும்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்டிருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

LIVE NEWS TAMIL
M K Stalin
chicken pox (1)
orange alert tn
CSK Squad
Red Alert TN
Fengal Cyclone