Categories: இந்தியா

சபரிமலை விவகாரம் : என்ன முடிவு ..? இன்று ஆலோசனை கூட்டம்..!!

Published by
Dinasuvadu desk
சபரிமலை விவகாரத்தில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு இன்று  ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை அமல்படுத்தும் முயற்சியில் கேரள மாநில அரசு இறங்கியுள்ளது. இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சபரிமலையின் பாரம்பரிய விதிகளை சீர்குலைக்க கூடாது என்று அய்யப்ப பக்தர்கள் கூறுகிறார்கள். மேலும் கேரள மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் அய்யப்ப பக்தர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயத்தில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டாலும் சபரிமலைக்கு செல்ல மாட்டோம் என்று பெண்களும் ஆங்காங்கே திரண்டு உறுதிமொழி எடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே கேரள மாநில அரசு அவசரச் சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. ஆனால் கேரள மாநில அரசிடம் இருந்து இதற்கு சாதகமாக எந்தஒரு நகர்வும் தென்படவில்லை. பா.ஜனதாவும், இந்து அமைப்புகளும் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது. தொடர் போராட்டம் நடந்து வருகிறது. சபரிமலையில் மகர விளக்கு மற்றும் மண்டல பூஜை விழா அடுத்த மாதம் (நவம்பர்) 17–ந் தேதி தொடங்குகிறது.
இதையொட்டி பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிப்பதற்காக ஆலோசனை கூட்டம் ஒன்றை திருவிதாங்கூர் தேவசம்போர்டு நடத்துகிறது. இன்று  நடைபெறும் இந்த கூட்டத்துக்காக தந்திரிகள், பந்தளம் அரச குடும்பத்தினர், பக்தர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் கூறுகையில், ‘சபரிமலை தொடர்பான எந்த விவகாரத்திலும் தேவசம்போர்டு பாரபட்சம் காட்டுவதில்லை.
கோவில் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிப்பதற்கு இந்த கூட்டம் நடத்துகிறோம். இதில் அவர்கள் பங்கேற்று தங்கள் கருத்துகளை கூறட்டும். அதைத்தொடர்ந்து அனைத்து விவகாரங்கள் தொடர்பாகவும் முடிவு எடுக்கலாம்’ என்று தெரிவித்தார். இந்த கூட்டத்தில் பங்கேற்பது குறித்து ஒருங்கிணைந்த முடிவு பின்னர் எடுக்கப்படும் என பந்தளம் அரச குடும்பம் மற்றும் தாழமன் தந்திரிகள் கூறியுள்ளனர்.
DINASUVADU
Published by
Dinasuvadu desk

Recent Posts

தமிழகத்தில் புதன்கிழமை (25/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

தமிழகத்தில் புதன்கிழமை (25/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…

2 hours ago

டங்ஸ்டன் சுரங்கம் விவகாரம் : மறு ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரை!

டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…

3 hours ago

இது தெரியாம போச்சே! இலவசமாக யூடியூப் பிரீமியம் வாங்குவது எப்படி தெரியுமா?

சென்னை : இன்றயை காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. இதில் பொழுதுபோக்குக்காகவும், சில முக்கிய…

4 hours ago

வாய்ப்பு கொடுத்த கேப்டன்! வெஸ்ட் இண்டீஸை வெளுத்து விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த ஹர்லீன் தியோல்!

குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…

5 hours ago

போட்றா வெடிய…  சாம்பியன்ஸ் டிராபி போட்டி அட்டவணை இதோ! IND vs PAK போட்டி எப்போது?

டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே உள்ளஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான…

5 hours ago

ஹூஸ்டன் தமிழாய்வு இருக்கை – மேலும் ரூ.1.50 கோடி ஒதுக்கீடு செய்த தமிழக அரசு!

சென்னை :  அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும்…

5 hours ago