கேரள உயர்நீதிமன்றத்தில் பாஜக பிரமுகமரும், இந்துமத ஆர்வலருமான டி.ஜி.மோகன் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அடுத்த மாதம் சபரிமலையில் மண்டல பூஜைதொடங்கிவிடும்.எனவே பக்தர்களைத் தவிர வேறு யாரும் கோயிலுக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும்.தீர்பளித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கொண்டு இந்துக்கள் அல்லாதவர்களும் வழிபாட்டில் நம்பிக்கை இல்லாதவர்களும் கோயிலுக்குள் நுழைவதை தடை செய்ய வேண்டும். அதற்கான போதுமான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தன் மனுவில் கோரி இருந்தார்.
இதனை அடுத்து 4 பெண்கள் கேரள் உயர்நீதிமன்றத்தில் தனியாக தாக்கல் செய்த மனுவில் நாங்கள் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்ய இருப்பதால் எங்களுக்கு போதுமான பாதுகாப்பை வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரி இருந்தனர். இந்த இரு மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம் விசாரணையை நடத்தியது.இந்த வழக்கின் விசாரணையை நீதிபதிகள் பி ராமச்சந்திர மேனன், தேவன் ராமச்சந்திரன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது விசாரணையின் போது கேரள உயர்நீதிமன்றம்
சபரிமலை ஐயப்பன் கோயில் என்பது இந்துக்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. அது கோயில் மீதும் அதன் பாரம்பரியங்கள் மீதும் நம்பிக்கை வைத்திருக்கும் அனைவருக்கும் சொந்தமானது தான் ஐயப்பன் கோயில். அதேசமயத்தில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் அனைவரும் இருமுடி கட்டி அதனை அணிந்து செல்ல வேண்டிய அவசியமில்லை ஆனால், இருமுடி கட்டி செல்பவர்கள் மட்டுமே ஐயப்பனின் 18 படிகளை கடக்க முடியும். இந்த விவகாரத்தில் ஆளுக்கின்ற கேரள அரசும், கோவிலை நிர்வாகிக்கும் திருவிதாங்கூர் தேவஸ்தானமும் இரு வாரங்களுக்குள் பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.இந்த மனு பாஜக பிரமுகரின் மீது நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதே நேரத்தில் 2 பெண் வழக்கறிஞர்கள் உள்பட 4 பெண்கள் தாக்கல் செய்த மனுமீது நீதிபதிகள் பக்தர்களாக இருந்தால் அவர்களுக்கும் அனைத்து வகையான வசதிகளையும் வழங்க வேண்டும் என்று கேரள அரசுக்கு உத்தரவிட்டனர்.பரபரப்பாகி கொண்டிருக்கும் கேரளாவில் சபரிமலை சர்ச்சை நீண்டு கொண்டே செல்கிறது.