சபரிமலையில் பெண்களுக்கு 2 நாட்கள்…கேரள அரசின் அடுத்த முயற்சி…!!
சபரிமலையில் பெண்கள் வழிபடுவதற்காக மட்டும் 2 நாட்களை ஒதுக்க தயாராக இருப்பதாக, கேரள உயர் நீதிமன்றத்தில் மாநில அரசு தெரிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. ஆனால், சபரிமலையில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து, ஐயப்ப பக்தர்களும், இந்து அமைப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனிடையே சபரிமலையில் பெண்கள் வழிபடுவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்ய உத்தரவிடக் கோரி, கேரள உயர் நீதிமன்றத்தில் 4 இளம்பெண்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த விசாரணையின்போது, சபரிமலையில் பெண்கள் வழிபடுவதற்காக மட்டும் 2 நாட்களை ஒதுக்க அரசு தயாராக இருப்பதாக, மாநில அரசு தெரிவித்தது.
dinasuvadu.com