சபரிமலையில் பெண்களுக்கு தனி கோவில்….நடிகர் பேச்சு…!!
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் அருகே பெண்கள் மட்டும் வழிபடுவதற்காக புதிய கோயில் கட்டத்தயாராக இருப்பதாக நடிகர் சுரேஷ்கோபி தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் திறப்புவிழா ஒன்றில் கலந்துகொண்ட நடிகரும் எம்பியுமான சுரேஷ்கோபி பேசும்போது, ’சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் அருகே பெண்கள் மட்டும் வழிபடுவதற்காக புதிய கோயில் கட்டத்தயாராக இருக்கிறேன்.
காணிக்கைக்கான உண்டியல்கள் இல்லாத வகையில் புதிய கோயிலை அமைக்கும் திட்டம் என் மனதில் உள்ளது. இதற்கான விளம்பரம் விரைவில் வெளியாகும். மத்திய அரசோ, மாநில அரசோ இடம் ஒதுக்கித்தந்தால் உடனே கோயில் கட்டப்படும். அல்லது நல்லவர்கள் யாராவது சபரிமலையை ஒட்டியுள்ள பகுதியில் இடம் வழங்கினால் அங்கு கோயில் அமைக்கலாம்.சபரிமலை அல்லது பத்தணம்திட்டா பகுதியை ஒட்டிய பகுதியில் புதிய கோயில் கட்டும் திட்டம் உள்ளது. புதிய கோயில் விக்கிரகம் நாடு முழுவதும் ஊர்வலமாக எடுத்து வந்து பிரதிஷ்டை செய்யப்படும். இந்தக் கோயிலில் பெண் பூசாரியை நியமிப்பது குறித்தும் ஆலோசித்துவருகிறேன்” என்று பேசியுள்ளார்.