சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் நுழைவதற்கு இதுவரை இருந்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.
இதையடுத்து, சபரிமலையில் பெண்கள் வருவதற்கான அடிப்படை வசதிகளை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் முற்போக்கான தீர்ப்பை பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துமதவாத அமைப்புகள் கேரள அரசுக்கு வேண்டுமென்றே நெருக்கடி கொடுக்கும் வகையில் போராட்டங்களை நிகழ்த்தி வருகின்றன. அதன் தொடர்ச்சியாக நடிகரும், பா.ஜ.க நிர்வாகியுமான கொல்லம் துளசி கூட்டம் ஒன்றில் பேசியபோது, சபரிமலைக்குள் நுழையும் பெண்கள் இரண்டாக வெட்டப்பட்டு உடலின் ஒரு பாதியை முதல்வர் பினராயி விஜயன் வீட்டின் முன்பும், மற்றொரு பாதியை டெல்லியிலும் வீசப்படுவார்கள் என பேசி சர்ச்சையை கிளப்பினார்.
பா.ஜ.க நிர்வாகியின் இப்பேச்சுக்கு பலதரப்பில் எதிர்ப்புகளும், கண்டனங்களும் எழுந்ததையடுத்து அவர் தற்போது தனது பேச்சிற்காக மன்னிப்பு கோரியுள்ளார். எனினும், அவர்மீது கேரள காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
DINASUVADU
உத்திரபிரதேசம் : மாநிலத்தில் சம்பல் என்ற ஷாஹி ஜமா மசூதி ஒன்று இருக்கிறது. ஆனால், இந்த மசூதி இங்கு இருப்பதற்கு முன்னதாக…
சென்னை : தமிழகத்தின் முதல் பெண் முதல்வரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகியின் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் வானகரத்தில்…
சென்னை : அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் திருநாள் அன்று சிஏ பவுண்டேஷன் தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய…
பெர்த் : இந்திய அணியில் சம்பவம் செய்வதற்கு நான் இருக்கிறேன் என்கிற வகையில், இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக…
புதுக்கோட்டை : நகர்ப்புறத்தில் அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக புதுக்கோட்டையில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று…