சபரிமலையில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருவதால் 144 தடை உத்தரவு வரும் 22-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதான நடை கடந்த மாதம் 16-ம் தேதி மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டது. அப்போது இளம்பெண்கள் தரிசனம் செய்வதற்காக வந்ததால் பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். இதனிடையே போராட்டங்களை தடுக்கும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருவதால், 144 தடை உத்தரவை வரும் 22-ம் தேதி வரை நீட்டித்து பத்தினம்திட்டா மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…