சபரிமலையில் துவங்கப்படுகிறது ‘பசுமை’ விமான நிலையம்…!
சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு வசதியாக பசுமைமாறா விமான நிலையம் துவங்குவதற்கான வாய்ப்பு குறித்து, யூலிஸ் பர்கர் என்ற நிறுவனம் ஆய்வு செய்து வருவதாக கேரள சட்டமன்றத்தில் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி அரசு பிறப்பித்த உத்தரவின் படி, இந்த திட்டத்திற்கான தொழில்நுட்ப, சுற்றுச்சூழல் வாய்ப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், அதனடிப்படையில், 9 மாதங்களில் பணியை நிறைவு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் திட்டத்திற்கு தேவையான அங்கீகாரமும், அனுமதியும் அளிக்கப்பட்டு உள்ளது எனவும் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
மேலும், விமான நிலையத் திட்டத்திற்கு, அரசின் கேஎஸ்டிசி நிறுவனமானது, யூலிஸ் பர்கர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.