சபரிமலையில் தலையிடுகிறதா பாஜக……ரத யாத்திரை கொண்டு நுழையும் அமித்ஷா…..படையெடுக்கும் பாஜக….பரபரப்பாகும் கேரளா…!!
சபரிமலை ஐயப்பனை பாஜ தலைவர் அமித்ஷா சபரிமலையில் தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தவகல்கள் வெளியாகியுள்ளது.
சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிப்பது தொடர்பாக கடந்த வாரம் வன்முறை சம்பவங்கள் நடந்தன. இந்த வன்முறை தொடர்பாக இதுவரை 3300க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.சபரிமலை இந்த விவகாரம் கேரளா முழுவதும் போராட்டங்கள் ஏற்பட காரணமாகி வருகின்றன.இதற்கிடையே அடுத்த மாதம் நவ.8ம் தேதி முதல் 13ம் தேதிவரை கேரளாவில் ரதயாத்திரை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. காசர்கோட்டில் 8ம்தேதி தொடங்குகின்ற இந்த ரத யாத்திரை 13ம் தேதி சபரிமலையில் நிறைவடைகிறதாம்.
ராத ரத்திரைக்கு முன்னதாக சரியாக 2 தினங்களுக்கு முன்பு கேரளாவுக்கு வந்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, சபரிமலை கோயில் ஆச்சாரங்களை பாதுகாப்பதற்காக போராட்டம் நடத்துகின்ற பக்தர்களை ஒடுக்க நினைத்தால் கேரள அரசுக்கு சிக்கலை சந்திக்க வேண்டும் என்று எச்சரித்தார்.
இதையடுத்து சபரிமலை போராட்டத்தை தீவிரப்படுத்த பாஜக் முடிவெடுத்துள்ளது. இந்த போராட்டத்துக்கு பாஜக தலைவர் அமித்ஷா பச்சைக்கொடி காண்பித்து அரம்பித்து வைத்துள்ளார். முதலில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ஆதரவு தெரிவிப்பது போல் பாஜக நாடகமாடிவிட்டு இப்பொழுது தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகிறது. இது ஒருபுறம் தீவிரமடைய மேலும் இதனை தீவிரப்படுத்த அமித்ஷா சபரிமலைக்கு வர திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சபரிமலைக்கு மண்டல கால பூஜையின் போது தரிசனத்திற்கு வருவார் என்று கூறப்படுகிறது.இது குறித்து தேதி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் பாஜகவின் சபரிமலை செல்லும் ரத யாத்திரை நிறைவு விழாவில் பாஜக தலைவர் அமித்ஷாவை பங்கேற்க செய்ய பாஜவினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். அமித்ஷாவோ மண்டலகால தரிசனத்திற்கு தான் வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ரதம் மற்றும் அமித்ஷாவின் கேரள படையெடுப்பு விவகாரம் கேரளாவில் தற்போது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
DINASUVADU