சத்தீஸ்கர் மாநிலம், ஜாங்ஜிர்-சம்பா மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையதிற்கு இரண்டு சன்னியாசினிகள் கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி வந்தடைந்தனர். அவர்களை அம்மாவட்டத்தில் உள்ள ஆசிரம் ஒன்றிற்கு காரில் அழைத்து செல்ல அவர்களுக்கு அறிமுகமான திலிப்சந்த் படேல் என்பவர் ரயில் நிலையம் வந்திருந்தார்.
ஆனால், ஆசிரமம் செல்வதற்கு பதிலாக குழந்தை ஒன்றின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வருகை தர வேண்டும் என்று சன்னியாசினிகளை எமாற்றி கோர்பா மாவட்டம் செல்லும் வழியில் காரை ஓட்டி சென்றுள்ளார் படேல். அங்கு துப்பாக்கி முனையில் படேல் உள்பட மேலும் மூவர் சேர்ந்து சன்னியாசினிகளை கூட்டாக கற்பழித்துள்ளனர்.
அதைத்தொடர்ந்து, சத்தீஸ்கர் மாநிலத்தை விட்டே சென்று விட வேண்டும் என சன்னியாசினிகளுக்கு அவர்கள் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சன்னியாசினிகளில் ஒருவர் அம்மாநில முதல்வர் ரமன் சிங்கிற்கு புகார் மனு ஒன்றை எழுதியிருந்தார்.
புகார் மனு தொடர்பாக மாநில அரசின் அறிவுறுத்தலின்படி குற்றம்சாட்டப்பட்ட 4 பேர் மீதும் நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில போலீசார் இன்று தெரிவித்துள்ளனர்.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…