தெலுங்கானா முதல்வர் சந்திரசேகராவ் 3வைத்து அணி என்ற வலையில் யாரும் சிக்க மாட்டார்கள் , பிரிவிணை அரசியல் மூலம் பா.ஜ.கவுக்கு சந்திரசேகரராவ் உதவுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
சமீபத்தில் நடந்த 5 மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் 3 மாநிலங்களில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அதிலும் தெலங்கானா மற்றும் மிசோரமில் அந்த மாநில கட்சிகள் ஆட்சியை பிடித்தன. அதுமட்டுமில்லாமல் தெலங்கானாவில் தனிபெரும்பான்மையுடன் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை தக்கவைத்தார் சந்திரசேகரராவ்.இந்த தேர்தல் வெற்றிக்கு பிறகு அனைவரும் அடுத்த வருடம் வருகின்ற பாராளுமன்ற தேர்தலை நோக்கி பயணிக்கின்றனர்.
இந்நிலையில் தேசியளவில் பி.ஜே.பி. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு மாற்றாக 3-வது அணியை உருவாக்கும் முயற்சியில் தெலங்கானா சந்திரசேகராவ் ஈடுபட்டு வருகின்றார்.அவர் அதன் தொடர்ச்சியாக மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி மற்றும் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆகியோரை சந்தித்து மூன்றாவது கூட்டணி குறித்து பேசி வருகின்றார்.தெலங்கானா முதல்வர் சந்திரசேகராவ்_வின் மூன்றாவது அணியின் முயற்சி குறித்து காங்கிரஸ் கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
சந்திரசேகராவ்_வின் மூன்றாவது அணி குறித்த கேள்விக்கு , செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, எந்த கட்சி தலைவரும் யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம் , பேசலாம் . சந்திரசேகரராவின் வலையில் யாரும் சிக்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…