சத்தீஸ்கர் அருகே லாரி தீப்பிடித்து எரிந்து விபத்து!
லாரி ஒன்று சத்தீஸ்கர் மாநிலம் தான்டேவாடாவில், தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. லாரியிலிருந்து புகை வருவதை கண்ட ஓட்டுநர், அருகிலுள்ள தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார். நிகழ்விடத்திற்கு தீயணைப்புத்துறையினர் வருவதற்குள், லாரி முற்றிலும் எரிந்து நாசமானது.
இதேபோல், குஜராத் மாநிலம் பன்னாஸ்கந்தா மாவட்டத்தில், சாலையில் சென்றுகொண்டிருந்த லாரி தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், தீயை கட்டுப்படுத்தினாலும், லாரி முற்றாக எரிந்தது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.