சத்தீஷ்கர் தேர்தல்…மாவோயிஸ்டுகள் வெடி குண்டு தாக்குதல்..!!
சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் தண்டேவாடா பகுதியில் மாவோயிஸ்டுகள் வெடி குண்டு தாக்குதல் நடத்தினர்.
90 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகள் உள்ளிட்ட 18 தொகுதிகளில் இன்று முதற்கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என மாவேயிஸ்டுகள் மிரட்டி உள்ளதால், வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த பாதுகாப்பையும் மீறி தண்டேவாடா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி உள்ளனர். தேர்தல் பணிக்காக இன்று அதிகாலையில் தேர்தல் அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் சென்றபோது துமக்பால்-நயனார் சாலையில் குண்டு வெடித்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதிகாரிகள் பாதுகாப்பாக தங்கள் வாக்குச்சாவடிக்கு சென்று சேர்ந்தனர். அதேபோல், கோண்டா பந்த வாக்குச்சாவடி அருகே அதி நவீன வெடி குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
dinasuvadu.com