கேரள மாநிலம் எர்ணாகுளத்தின் மைய பகுதியில் காய்கறி மார்க்கெட் உள்ளது.
இந்த மார்க்கெட்டில் தேங்கும் குப்பைகள் சாலையோரம் குவித்து வைக்கப்பட்டிருந்தது. ஒரு வாரமாகியும் இந்த குப்பைகள் அகற்றப்படவில்லை.
இதுபற்றி மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் அருகில் உள்ள பள்ளி நிர்வாகத்தினர் கொச்சி மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பிறகும் குப்பைகள் அகற்றப்படவில்லை.
இந்த நிலையில் எர்ணாகுளம் சட்ட உதவி மைய துணை நீதிபதி பசீர் நேற்று இக்குப்பைகளை அகற்றக்கோரி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். காய்கறி மார்க்கெட் அருகே குவித்து வைக்கப்பட்ட குப்பைகளின் அருகில் அமர்ந்தபடி போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது கொச்சி மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. அவர்கள் மின்னல் வேகத்தில் மார்க்கெட்டுக்கு வந்தனர். 1 மணி நேரத்தில் குப்பைகள் அனைத்தையும் அகற்றினர்.
நீதிபதி ஒருவர் நேரடியாக களத்தில் இறங்கி போராடியதும், இதனால் ஒரு வாரமாக தேங்கி கிடந்த குப்பை உடனடியாக அகற்றப்பட்டதும் அப்பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.
கேரளாவில் கடந்த சில மாதங்களாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. சுகாதார சீர்கேடே இந்நோய்களுக்கு காரணம். எனவே சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைக்க வேண்டும். எனவே தான் குப்பைகளை அகற்ற போராட்டத்தில் ஈடுபட்டேன்.
இப்பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் பலர் இதுபற்றி புகார் தெரிவித்தனர். அக்கம் பக்கத்தினரும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அவர்களின் கோரிக்கையை ஏற்றே இப்போராட்டத்தை நடத்தினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, எர்ணாகுளம் காய்கறி மார்க்கெட்டில் தினமும் 6 முதல் 7 லோடு குப்பைகள் தேங்கும். அவற்றை உடனுக்குடன் அகற்றுவோம். கடந்த 2 நாட்களாக மழை பெய்ததால் குப்பைகளை அகற்ற முடியவில்லை. எனவேதான் குப்பைகள் தேங்கி விட்டது என்றனர்
சென்னை -சிக்கல் சிங்கார வேலன் கோவிலின் சிறப்புகளையும் அதிசயங்களையும் இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் காணலாம். ஆலயம் அமைந்துள்ள இடம்…
கேரளா : வயநாடு தொகுதியில் நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சகோதரி…
சென்னை : கங்குவா படத்தின் முதல் பாகம் வரும் நவம்பர் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் பல…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன் கடந்த சில மாதங்களுக்கு…
சென்னை : சென்னையில் பிராமணர்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட போது, தெலுங்கு மக்கள் பற்றி அவதூறாக பேசியதாக பதிவான வழக்கில்…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…