“சட்டபேரவை தேர்தலில் ஓங்கும் கை”க்கே வெற்றி வாய்ப்பு…கருத்து கணிப்பு…..கலட்டிவிடப்படும் பிஜேபி..!!
5 மாநிலங்களுக்குக்கான சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியே வெற்றீ பெறும் என்று கருத்து கணிப்பு முடிகள் தெரிவிக்கின்றது.
சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ளதாக சி.ஓட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
இந்த தேர்தல் தொடர்பாக 5 மாநில தேர்தல் குறித்து பிரபல கருத்துக்கணிப்பு நிறுவனமான சி.ஓட்டர் இந்த கருத்துகணிப்பை நடத்தியது.இதில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இந்த முடிவுகள் அடிப்படையில் 200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி 150 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அம்மாநிலத்தை ஆளுகின்ற பாஜகவிற்கு 45 தொகுதிகளில் மட்டுமே கிடைக்கும் இதனால் ராஜஸ்தானில் பாஜக படுதோல்வியடையும் என்றும் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
அடுத்த சட்டப்பேரவை தேர்தலான மத்தியப்பிரதேசத்தில் 230 தொகுதிகளைக் கொண்டுள்ளது.இதில் காங்கிரஸ் கட்சி 116 தொகுதிகளையும், பாஜக 107 தொகுதிகளையும் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் மத்தியப்பிரதேசத்திலும் பாஜக தோல்வியடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் 119 தொகுதிகளைக் கொண்டது.இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது இந்த கூட்டணிக்கு 64 தொகுதிகள் கிடைக்கும் என்று சி.ஓட்டர் நிறுவனம் கூறியுள்ளது.இதில் அம்மாநிலத்தை ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதிக்கு 50க்கும் குறைவான இடங்களே கிடைக்கும் என கூறியுள்ளது.
அடுத்து சட்டப்பேரவை தேர்தல் 90 இடங்களை கொண்ட சட்டீஸ்கர் மாநிலத்தில் நடைபெறவுள்ளது.இந்த தேர்தலில் பாஜக 43 தொகுதிகளை பெறும் என்றும் காங்கிரஸ் 41 தொகுதிகள் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் அம்மாநிலத்தில் ஆட்சியமைப்பதில் இழுபறி ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைவான தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநிலத்தில் 40 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது.இதில் அம்மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணியும் காங்கிரசுக்கும் இடையே போட்டியிருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படும் இந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 3 மாநிலங்களை காங்கிரஸ் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக தகவகள் வெளியாகியுள்ளது. இந்த கருத்துக்கணிப்பு பாஜக தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
DINASUVADU