சச்சினின் முதல் உரை பாராளுமன்றத்தில் காங்கிரஸ் அமளியால் தடை

Default Image

இந்திய கிரிகெட் அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் 2012ஆம் ஆண்டு ராஜ்யசபா எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்று முதல் அவரின் வருகை குறைபாடு காரணமாக விமர்சிக்கபட்டார். ஆனால், அவர் விளையாட்டு உள்கட்டமைப்பு மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு தொடர்பான கேள்விகளை கேட்டு உள்ளார். சமூக நலனுக்காக பாராளுமன்ற உறுப்பினராக அவர் துறையில் ஒதுக்கப்பட்ட நிதியில் 98 சதவீதம் பயன்படுத்தி உள்ளார்.

அவர் இன்று முதன் முதலாக பாராளுமன்றத்தில், விளையாட்டு வீரர்களின் எதிர்காலம் என்கிற தலைப்பில் பேச ஆரம்பித்தார். ஆனால் அவர் பேசிய சில நிமிடங்களிலேயே காங்கிரஸ் தரப்பு, மன்மோகன் சிங் பற்றி பிரதமர் கூறியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், அவர் இங்கு வர வேண்டும் எனவும் கூறினர். இதனால் சச்சின் பேச்சு தடைபட்டது.

மேல்சபை தலைவர் வெங்கய்யா நாயுடு காங்கிரஸ் தரப்பு எம்.பி.க்களை அமைதிப்படுத்த பல முறை முயன்றார், அவர்களது ஆர்ப்பாட்டங்கள் பதிவு செய்யப்பட போவதில்லை என அவர் கூறினார். பாரத ரத்னா விருதுக்கு மரியாதை காட்டும்படி கேட்டுக் கொண்டார்.

இருந்தாலும் காங்கிரஸ் எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், நாள் முழுவதும் சபை ஒத்திவைக்கப்பட்டது. இதனால் சச்சினின் முதல் உரை தடைபட்டது. சபை ஒத்திவைக்கபட்டதை தொடர்ந்து , முன்னாள் நடிகையும் ராஜ்ய சபை எம்பியுமான ஜெயாபாச்சன், சச்சின் பேச பாராளுமன்ற உறுப்பினர்கள் அனுமதிக்கவில்லை இது, ஒரு அவமனகரமான விஷயம் என்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்