சசி தரூரை தாக்கிய சுப்பிரமணியன் சுவாமி..!
சுனந்தா புஷ்கர் மரண வழக்கில், சசி தரூருக்கு முன்ஜாமீன் வழங்கியது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்.இதுகுறித்து பா.ஜ.க-வைச் சேர்ந்த சுப்பிரமணியன் அவரது கருத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார் ஆனால் தற்போது இந்த பதிவை நீக்கியும் உள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, `சசி தரூர் , திகார் சிறையில் இல்லை. ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியுடன் அமர்ந்துகொள்ளலாம். ஏனெனில், அவர்களும் ஜாமீனில் இருக்கிறார்கள். முன்ஜாமீன் கிடைத்ததுகுறித்து சசி தரூர் கொண்டாடுவதற்கு எதுவும் இல்லை. அதே நேரத்தில், அவர் வெளிநாட்டுக்குச் செல்ல முடியாது. உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள அவரது பெண் தோழிகளையும் பார்க்க முடியாது’ என்றார்.