சகோதரியின் இரட்டை சிறுவர்களை கொன்ற கொடூரன்..!
தெலங்கானா மாநிலம் நல்கொன்டா மாவட்டத்தில் உள்ள மிர்யல்குடா பகுதியில் ஒருபெண்மனி மனநலம் பாதிக்கப்பட்ட இரட்டை சிறுவர்களுடன் வசித்து வந்தார்.
இரட்டை சிறுவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததால் தனது சகோதரி மற்றும் அவரது குடும்பம் மிகுந்த துயரத்தை அனுபவித்து வருவதாக சிறுவர்களின் மாமா அக்கம் பக்கத்தினரிடம் கூறி வருந்தியுள்ளார்.
இந்நிலையில், தங்கையின் வீட்டில் இருந்து அந்த சிறுவர்களை தனது வீட்டிற்கு அவரது மாமா நேற்று அழைத்து வந்துள்ளார். இரவு நேரத்தில் சிறுவர்களை அவர் கொன்றுள்ளார். அதன் பின்னர் வீட்டில் இருந்து சிறுவர்களது உடல்களை காரில் ஏற்றும் போது வீட்டின் உரிமையாளர் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து. அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் சிறுவர்களின் உடல்களை கைப்பற்றினர். சிறுவர்களை கொன்ற நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.