கோவாவில் பயணிகளை விட்டு சென்ற இண்டிகோ விமானம்!பயணிகள் தவிப்பு …..
குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாக புறப்பட்டுச் சென்ற இண்டிகோ விமானத்தால் 14 பயணிகள் அவதிக்குள்ளாகினர் .
கோவாவில் இருந்து ஹைதராபாத் செல்லும் விமானம் இரவு 12.05க்கு பதிலாக, 25 நிமிடங்கள் முன்னதாகவே புறப்பட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
தங்களுக்கு உரிய முறையில் தகவல் தெரிவிக்காமல், அறிவிக்கப்பட்ட நேரத்தை விட, முன்கூட்டியே விமானத்தை இயக்கிவிட்டதாக 14 பயணிகள் குற்றஞ்சாட்டினர். ஆனால், விமான நிலையத்தில் பலமுறை அறிவிக்கப்பட்டதாகவும், அப்போது குறிப்பிட்ட 14 பேரும் வரவில்லை என்றும் கூறியுள்ள விமான நிறுவனம், அதிகாலையில் புறப்பட்ட மற்றொரு விமானத்தில் அவர்கள் அனைவரையும் அனுப்பி வைத்ததாக கூறியுள்ளது.