கோவாவில் இருந்த காலனி ஆதிக்கம் இன்னும் முழுமையாக நீங்கவில்லை என்று அம்மாநில முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியுள்ளார்.
கோவா புரட்சி நாளையொட்டி, விடுதலை போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு பனாஜி நகரில் அவர் மரியாதை செலுத்தினார். அப்போது பேசிய அவர், காலனி ஆதிக்கத்திற்கு எதிரான போர் இன்னும் தொடர்கிறது என்றார்.
போர்ச்சுக்கீசியர்களிடம் விடுதலை பெற்று 57 ஆண்டுகள் ஆகியும் மேயம் ((mayem)) கிராமத்தில் உள்ள நிலங்களை உரிமை கொண்டாடுவதில் இன்னும் தீர்வு காணப்படவில்லை என்று கூறினார்.
60 ஆண்டுகளுக்கு மேல் அங்கு வசித்துவரும் மக்கள், அந்த நிலத்தை அவர்களே சொந்தம் கோருவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் மனோகர் பாரிக்கர் குறிப்பிட்டார்.